ஹொன்னேமரடு’வுக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த கடேமனே எனும் கிராமத்துக்கும் விஜயம் செய்வது அவசியம். இது மலநாட் பகுதியில் உள்ளது. இந்த கடேமனே கிராமம் சிதாரா எனப்படும் கைவினை வேலைப்பாட்டுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் தீவா இனத்தாரால் இந்த கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த கிராமத்தின் சுவர்களில் உள்ளூர் மக்களால் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இங்கு வருகை தரும் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன. சுபதினங்கள் மற்றும் பண்டிகைக்காலங்களின் போது இந்த கிராம மக்கள் தங்கள் இல்லங்களை விதவிதமான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றனர். இந்த சுவரோவியங்கள் அரிசிக்கரி மற்றும் காட்டுப்பழங்களிலிருந்து உருவாக்கிய வண்ணங்களை பயன்படுத்தி தீட்டப்படுகின்றன என்பது ஒரு ஆச்சரியமான அம்சமாகும்.
துரதிருஷ்டவசமாக இந்த இயற்கைச்சாய வண்ணங்கள் தயாரிக்கும் பாரம்பரியம் அழியும் நிலையில் உள்ளது. இருப்பினும் இது அழிந்து போய் விடாமல் பாதுகாக்க பல முயற்சிகள் தற்சமயம் தொடங்கப்பட்ட்டுள்ளன.பழங்கால குகை ஓவியங்களை ஒத்திருக்கும் இந்த கிராம ஓவியங்கள் இங்கு வருகை தரும் பயணிகளின் நினைவில் என்றுமே நிலைத்து நிற்கும் இயல்புடையதாக உள்ளது.



Click it and Unblock the Notifications