Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஹோசாங்காபாத்

ஹோசாங்காபாத் - மறக்கமுடியாத அனுபவம்!

9

இந்திய தேசத்தின் இதயப் பகுதியில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நர்மதை நதியின் வடக்கு கரையில் ஹோசாங்காபாத் அமைந்துள்ளது. இந்த இடம் இந்தியா மற்றும் மத்தியப் பிரதேச மாநில வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நர்மதை ஆற்றின் பெயரால் நர்மதாபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த இடம், இவ்விடத்தை ஆண்ட ஹோசாங் ஷா என்பவரின் பெயரால் ஹோசாங்காபத் என்று அழைக்கப்பட துவங்கியது. அந்த நாட்களிலிருந்தே, இந்த நகரம் அழகான, இயற்கையான, புனிதமான மற்றும் அற்புதமான இடங்களைப் பெற்றிருந்ததால் ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இடமாக உள்ளது.

ஹோசாங்காபாத்தும், அதன் சுற்றுப்புறமும்

ஹோசாங்காபாத் நகரத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது நர்மதா ஜெயந்தி திருவிழாவாகும். இந்த திருவிழா ஹோசாங்காபாத் சுற்றுலாவிற்கு மிகவும் பயன் தருவதாக உள்ளது.

சேதானி காட் என்ற இடமும் ஹோசாங்காபாத் நகரத்தின் முக்கியமான அடையாளமாகும். நர்மதை மற்றும் தாவா ஆகிய நதிகள் ஒன்றையொன்று குறுக்காக கடக்கும் இடமாக பாந்தராபான் என்ற இடமும் இங்கு புகழ் பெற்ற இடமாக உள்ளது.

ஹோசாங்காபாத்தின் மக்களில் பெரும்பாலோர் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர். இந்த நகரம் அதிகமான அளவு சோயா பீன்ஸ் உற்பத்தி செய்யும் பெருமை பெற்ற இடமாகும்.

இந்த நகரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான எண்ணற்ற பார்வையிடங்கள் உள்ளன. சாத்பூரா தேசிய பூங்கா, ஆடம்கார் மலைகளின் வரலாற்றுக்கு முந்தையகால சிற்பங்கள் அல்லது பாந்த்ராபான் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகள் முண்டியடிக்கும் இடங்களாகும்.

சல்கான்பூர், ஹுஷாங் ஷா கோட்டை, கெடாபடி ஹனுமான் மந்திர், ராம்ஜி பாபா சமாதி ஆகியவை ஹோசாங்காபாத் நகரத்தின் அழகை காட்டும் சில இடங்களாகும்.

சிவபெருமானின் வழிபாட்டுத் தலம் உள்ள புனிதத்தலமாகவும், மத்தியப் பிரதேசத்தின் ஒரே மலைவாசஸ்தலமாகவும் உள்ள பஞ்ச்மார்ஹியும் ஹோசாங்காபாத்தில் தான் உள்ளது. எனவே தான், ஹோசாங்காபாத் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக உள்ளது.

ஹோசாங்காபாத் செல்வோமா!

ஹோசாங்காபாத் வருடம் முழுவதுமே மகிழ்ச்சியான பருவநிலையைக் கொண்டிருக்கும் நகரமாகும். இந்நகரம் அருகிலுள்ள நகரங்களுடன் சாலை வழியாகவும், இரயில் வழியாகவும் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும், பல்வேறு வகையான அனுபவங்களை சேர்த்து வைத்துக் காட்டும் இடமாக ஹோசாங்காபாத் உள்ளது.

ஹோசாங்காபாத் சிறப்பு

ஹோசாங்காபாத் வானிலை

சிறந்த காலநிலை ஹோசாங்காபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹோசாங்காபாத்

  • சாலை வழியாக
    சிறந்த, தரமான சாலை போக்குவரத்து வசதிகளால் மத்தியப் பிரதேசத்தின் பிற நகரங்களுடன் ஹோசாங்காபாத் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தலைநகரத்தில் இருந்து குறைந்த தொலைவிலேயே உள்ளதால் சாலை வழியாக இங்கு வருவதில் சிரமம் எதுவும் இல்லை. மேலும், பார்வையாளர்கள் டாக்ஸிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்வதோ அல்லது பேருந்துகளைப் பயன்படுத்துவதோ கூட சிறந்த வழிமுறைகளாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஹோசாங்காபாத் நகரத்திலேயே இருக்கும் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் இரயில் நிலையத்தில் தொடர்ச்சியான இரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில் நிலையத்திலிருந்து மத்தியப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களுக்கும் இரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இரயில் போக்குவரத்தின் மூலமாக இந்நகரத்திற்கு வருவது சிறந்த தேர்வாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    70 கிமீ தொலைவில் உள்ள போபால் நகரத்தின் ராஜா போஜ் விமான நிலையம் தான் ஹோசாங்காபாத்திற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். போபால் விமான நிலையத்திலிருந்து ஹோசாங்காபாத் வருவதற்கு டாக்ஸிகள் வசதியான வாகனங்களாக உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளிலும் ஹோசாங்காபாத்திற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue