கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் காணப்படும் தொம்மன்குத்து நீர்வீழ்ச்சி தொடுப்புழா நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. சிறிய நீர்வீழ்ச்சியான இது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. அற்புதமான இயற்கைக்காட்சிகளை பின்னணியில் கொண்டுள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
தொம்மன் என்ற பழங்குடி இனத் தலைவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றைக்கடக்கும் போது இந்த நீர்வீழ்ச்சியில் அவர் அடித்துச்செல்லப்பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.
7 அடுக்கு நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் இந்த நீர்வீழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டுகள் போன்ற இந்த 7 பாறையடுக்குகளில் நீர் வழிந்தோடி வருவது இந்த நீர்வீழ்ச்சியின் விசேஷ அழகாக ரசிக்கப்படுகிறது.
பாறையேற்றம், நடைபயணம், மலையேற்றம் போன்ற தீவிரசாகச சுற்றுலா செயல்பாடுகளுக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி ஏற்றதாக உள்ளது. இவை தவிர மிதமான பொழுதுபோக்குகளான படகுச்சவாரி, மீன்பிடித்தல் மற்றும் குதிரைச்சவாரி போன்றவற்றிலும் பயணிகள் இங்கு ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications