இம்பால் நகரத்தின் மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் சம்பல்-லெய்-செக்பில் தோட்டம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த தோட்டத்தில் தான் 61 அடி உயரம் கொண்ட சம்பல்-லெய்-செக்பில் என்ற புதர் வகைகள் உள்ளன.
இதன் மிதமிஞ்சிய உயரத்தின் காரணமாகவே இந்த புதர்கள் 1991-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும், 1999-ம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றன. சம்பன் லெய் என்ற மணிப்புரி வார்த்தையில் 'சம்பன்' என்றால் வேலி என்றும், 'லெய்' என்றால் பூ என்றும் அர்த்தமாகும்.
மணிப்பூரின் பிரபலமான புதர் வகையான சம்பல்-லெய்-செக்பில் தாவரத்தின் தாவரவியல் பெயர் துரண்டா ரிபென்ஸ் லின் என்பதாகும். 1983-ம் ஆண்டு மோய்ராங்தெம் ஓகென்ட்ரா கும்பின் என்பவரால் கண்டறியப்பட்ட இந்த தாவரம், மணிப்பூரில் பரவலாகவே வீடுகளுக்கு வேலியாக பயன்படுத்தப்பட்டதால் சம்பன் லெய் என்று பெயர் பெற்றது.
தொடக்கத்தில் பொதுவான கண்காட்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த தாவரம், மேற்கொண்டு வளர்ந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை வந்த போது இந்த தோட்டத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. இந்த புதர்களுக்கு வான்வெளி பூக்கள் என்றும் ஒரு பெயருண்டு.



Click it and Unblock the Notifications