அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள இந்த கங்கா ஏரி ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். உள்ளூர் மக்கள் இதனை கெக்கார் சின்யி அல்லது கெயக்கார் செயனிக் என்று அழைக்கின்றனர்.
தலைநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த புகழ் பெற்ற ஏரியை சுற்றிலும் பசுமையான வனப்பகுதி காணப்படுகிறது. இதில் பழமையான தாவர வகைகள், உயரமான மரங்கள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள், பெரணிச்செடிகள் ஆகியவை நிரம்பியுள்ளன. ஏரியை சுற்றிலும் உறுதியான பாறை அமைப்புகளும் சூழந்துள்ளன.
கெக்கார் சின்யி எனும் பெயருக்கு உள்ளூர் மொழியில் ‘சிறைப்படுத்தப்பட்ட நீர்த்தேக்கம்’ என்பது பொருளாகும். பாறை அமைப்புகளுடன் காட்சியளிக்கும் இதன் கரைப்பகுதி பிக்னிக் சிற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.
படகுச்சவாரி, நீச்சல் மற்றும் இயற்கை நடைப்பயணம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால் இந்த ஏரிப்பகுதி சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இயமலையின் அடிவார மலைகளில் வீற்றிருக்கும் இந்த நிசப்தமான ஏரியைச்சுற்றிலும் இயற்கைப்பசுமை ஏராளமாய் பரந்து கிடக்கிறது. மரங்கள் போன்று வளர்ந்து நிற்கும் அற்புதமான பெரணி வகைகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.
உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரியின் அழகை பார்த்து ரசிப்பதற்காக விஜயம் செய்கின்றனர். நீரோட்டம் ஏதுமின்றி தேங்கிய நீராகவே இருப்பதால் இந்த ஏரி நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.
இது குறித்த சில ஐதீகக் கதைகளும் சொல்லப்படுகின்றன. ஏரியை சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை தரிசிப்பதை சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications