செயிண்ட் மேரி கதீட்ரல் என்றழைக்கப்படும் இந்த தேவாலயம் ஜலந்தர் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். லாகூர் டையோசீஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த தேவாலயம் தற்போது ஜலந்தர் நகர டையோசீஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
உயரமான குமிழ் கோபுர அமைப்புகள் மற்றும் சிலுவைகளுடன் இந்த பிரம்மாண்ட தேவாலயம் பார்வையாளர்களை கவர்கிறது. இதை சுற்றி அமைந்திருக்கும் தோட்டப்பூங்காவில் பலவிதமான மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.



Click it and Unblock the Notifications