துளசி மந்திர் அல்லது விருந்தா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் விருந்தா தேவியின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது. ஜலந்தரா எனும் அசுர வம்ச மன்னனின் மனைவியே இந்த விருந்தா தேவி.
இந்த கோயிலுக்கு அருகில் அன்னபூர்ணா தேவியின் சிலை அமைந்திருக்கும் ஒரு குகையும் காணப்படுகிறது. ஹிந்து மரபில் உணவு மற்றும் தானிய செழிப்புக்கான கடவுள் இந்த அன்னபூர்ணா தேவி என்பதையும் சொல்ல தேவையில்லை.
இந்த துளசி மந்திர் வளாகத்திலேயே அமைந்துள்ள ஷீதலா தேவி கோயில், ஜலந்தர் நகரத்தை ஒத்த பழமையை உடையதாக கருதப்படுகிறது. இவை தவிர இந்த கோயில் ஸ்தலத்தை சுற்றி சிவன் கோயில் மற்றும் பிரம்ம குண்டம் போன்ற இதர ஆன்மீக அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications