பஹு கோட்டையை சுற்றிபார்க்க செல்லும் பயணிகள் கோட்டையின் வளாகத்தில் அமைந்துள்ள புனித யாத்திரை தலமான பாவே வாலி மாதா கோவிலை பார்க்க முடியும். மகாராஜா குலாப் சிங், ஜம்மு & காஷ்மீர் ராஜாங்கத்தை கைப்பற்றிய பிறகு 1822 ல் இந்த கோவில் கட்டப்பட்டது.
இந்த பிரபலமான கோவில் ஜம்மு பிராந்தியத்தில் குடிகொண்டிருப்பதாக கருதப்படும் பிரபலமான கடவுளான காளி கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டது.
வைஷ்ணவி மாதா கோவிலுக்கு அடுத்தபடியாக புனித யாத்திரைக்கு தலைமை முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இது கருதப்படுகிறது. பக்தர்கள் குறிப்பாக ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், பெரும் எண்ணிக்கையில் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications