Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஜாஞ்ச்கிர்–சம்பா

ஜாஞ்ச்கிர்–சம்பா – மலைக்க வைக்கும் பாரம்பரிய அம்சங்கள்!

13

1998-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாஞ்ச்கிர்–சம்பா’ மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு ‘சத்திஸ்ஹரின் ஹிருதயம்’ எனும் சிறப்புப்பெயரும் உண்டு. தற்போது சத்திஸ்ஹர் மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஜாஞ்ச்கிர் விளங்குகிறது. குறிப்பாக தானிய உற்பத்தியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆதி காலத்தில் குல்சுரி வம்சத்தை சேர்ந்த மஹாராஜா ஜாஜ்வல்யா என்பவரின் ராஜ்யத்தில் இந்த ஜாஞ்ச்கிர்–சம்பா இடம் பெற்றிருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள உட்புற கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாக உள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களுக்கு உள்ளூர் இனப்பிரிவுகள் மற்றும் ஜாதிப்பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதை காணலாம். கஹ்ரா பரா, கலே பரா, பட்டா பரா என்பவை இந்த பெயர்களில் சில.

ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஹஸ்தேவ்-பாங்கோ அணைத்திட்டம் இங்குள்ள கிராமங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்தின் நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கியமான விவாசய விளைச்சல் கேந்திரமாக விளங்கும் இம்மாவட்டம் புதிதான காய்கறிகள் மற்றும் சுண்ணாம்புக்கற்கள் போன்றவற்றுக்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

புராதன வரலாற்று பின்னணியை கொண்டிருக்கும் இம்மாவட்டம் பழமையான பாரம்பரிய அம்சங்களை தனது நாகரிக அடையாளங்களாக கொண்டுள்ளது.

மற்றும் ஒரு சுவராசிய தகவல் என்னவெனில் டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்துபோனவர்களில் ஒருவரான ‘ஆனி ஃபங்க்’ எனும் கிறித்துவ பிரச்சாரகர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது!.

ஜாஞ்ச்கிர்–சம்பா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்

ஒரு நினைவகமாகவே மாற்றப்பட்டிருக்கும் ‘ஆனி ஃபங்க்’ எனும் கிறித்துவ பிரச்சாரகர் வசித்த வீடு இப்பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. பல முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்களும் இந்நகரம் மற்றும் மாவட்டத்தில் நிரம்பியிருக்கின்றன.

விஷ்ணு மந்திர், லக்ஷ்மணேஷரர் கோயில், ஆத்பர், நஹாரியா பாபா கோயில், துர்க்கா தேவி கோயில், ஷிவ்நாராயண் கோயில், சந்திரஹாசினி கோயில் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர மதன்பூர்கர், கன்ஹரா, பிதாம்பூர், தேவார் கட்டா, தமுதாரா, கட்டாடய் போன்ற இடங்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

இவை யாவற்றுக்கும் மேலாக இம்மாவட்டத்தில் உள்ள விஷ்ணு கோயில் ஒரு புராதன கலாச்சார அடையாளமாக வீற்றிருக்கிறது. ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்தின் ஆதி வைணவ மரபுகளையும் இது பிரதிபலிக்கிறது.

ஜாஞ்ச்கிர்–சம்பா பருவநிலை

சத்திஸ்ஹர் மாநிலத்தின் மற்ற எல்லா பகுதிகளையும்போலவே காங்கேர் மாவட்டமும் வெப்பமண்டல பருவநிலையை பெற்றிருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது. அதிக உஷ்ணம் மற்றும் ஈரப்பதத்தோடு காணப்படும் கோடைக்கு மாற்றாக குளிர்காலத்தில் இங்கு இனிமையான சூழல் நிலவுகிறது.

எப்படி செல்லலாம்?

விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை இந்த மாவட்டம் வாய்க்கப்பெற்றுள்ளது. எனவே பயணிகளுக்கு சிரமம் ஏது இருக்கப்போவதில்லை.

ஜாஞ்ச்கிர்–சம்பா சிறப்பு

ஜாஞ்ச்கிர்–சம்பா வானிலை

சிறந்த காலநிலை ஜாஞ்ச்கிர்–சம்பா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜாஞ்ச்கிர்–சம்பா

  • சாலை வழியாக
    ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்ட தலைநகரான ஜாஞ்ச்கிர் நகரத்துக்கு நகரத்திற்கு பேருந்து போக்குவரத்து வசதிகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. பிலாஸ்பூரிலிருந்து 65 கி.மீ தூரத்திலும் ராய்பூரிலிருந்து 175 கி.மீ தூரத்திலும் ஜாஞ்ச்கிர் நகரம் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜாஞ்ச்கிர்–சம்பா ரயில் ஹௌரா-மும்பை மெயின் லைன் பாதையில் அமைந்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வே பாதையுடனும் இதற்கு இணைப்பு உள்ளது. நைலா மற்றும் சம்பா எனும் இரண்டு முக்கியமான ரயில் நிலையங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. இது சத்திஸ்கரின் ரயில் நிலையமாகும். இந்தியாவின் பிற நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் இணைப்புகள் கிடைக்கின்றன. ஜய்பூர், புபனேஷ்வர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மாநிலத்தலைநகரான ராய்பூர் இங்கிருந்து 170 கி.மீ தூரத்தில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராய்பூர் விமான நிலையம் ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது. இந்தியாவின் முக்கிய மாநகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue