பொதுவாகவே சீக்கியர்களின் கோவில்களான குருத்துவாராக்களில் தான் 'சாஹிப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ஆனால், இங்கே தாம்டானின் மதம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக சாஹிப் என்று அழைக்கப்படுகிறது.
மதத்தலம் என்று பொருள்படும 'தர்மஸ்தான்' என்ற வார்த்தையின் திரிபாகவே தாம்டான் என்ற வார்த்தையாக கருதப்படுகிறது.
ஜாட் இனத்தவரின் கோட்டை போன்ற இடமான கிராமா தாம்டான் சாஹிப், ஜின்ட் மாவட்டத்தில் உள்ள நார்வானா தாலுகாவிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவிலும் மற்றும் இராமாணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் ஆசிரமும் உள்ளன. மேலும், இந்த இடத்தில் தான் ஸ்ரீ இராமபிரான் அஸ்வமேத யாகத்தை செய்தார் என்று நம்பப்படுகிறது.
மேலும், சீக்கியர்களின் 9-வது குருவான குரு தேஜ் பகதூர் டெல்லி செல்லும் வழியில் இங்கே தங்கிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது. உள்ளூர் மக்களால் குருவிற்கு பரிசாக கொடுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலப்பகுதியில், குருவின் வருகையை நினைவுபடுத்தும் வகையில் கோட்டையைப் போன்ற குருத்துவாரா ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், மஞ்சி சாஹிப் என்ற பெயரில் மற்றுமொரு குருத்துவாராவும் இந்த கிராமத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications