ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம் மண்டபம் காஞ்சி காம கோடி மடத்தால் கட்டப்பட்டது ஆகும். இந்த எட்டு மாடி மண்டபம் ஒரு பாதுகா மண்டபத்தில் சென்று முடிகிறது. இதன் கதவுகளில் குருவினுடைய பாதச் செருப்பு போன்ற வடிவில் கைப்பிடி குமிழ் ஒன்று வடிக்கப்பட்டிருப்பதால் இது பாதுகா மண்டபம் என்று அழைகப்படுகிறது.
ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பத்தின் நினைவு மண்டபத்தில் ஆதி சங்கரின் வாழ்கையை எடுத்துச் சொல்லும் விதமாக எண்ணற்ற ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அதோடு இந்த மண்டபத்தில் விநாயகர் மற்றும் ஆதி சங்கரரின் சிலைகளையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் 8 பக்கங்களை கொண்ட ஆதி சங்கரரின் ஸ்தூபி ஒன்றும் இங்குள்ளது.



Click it and Unblock the Notifications