கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கல்பெட்டா நகரம். இந்த நகரத்தில் ஏராளமான ஆலயங்கள் அமைந்திருப்பதால் கல்பெட்டா ஹிந்துக்களின் பிரசித்திபெற்ற யாத்ரீக ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.
கல்பெட்டாவின் புகழ்பெற்ற ஹிந்துக் கோயில்களான ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில், ஐயப்ப சுவாமி கோயில், கிரம்மாம் தேவி கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் பக்தர்கள் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.
அதோடு கல்பெட்டாவில் புலியார்மலா ஜெயின் கோயில் உள்ளிட்ட ஜைன கோயில்கள் சிலவும் இருக்கின்றன. இவைதவிர 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரம்பெட்டா மசூதி கல்பெட்டா நகரின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலமாகும்.
கல்பெட்டா நகரில் உள்ள கோயில்களை தவிர நீங்கள் மீன்முட்டி, சூச்சிப்பாறை, கந்தன்பாறை போன்ற அருவிகளுக்கும் சென்று உல்லாசமாக பொழுதை கழிக்கலாம். மேலும் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கும் கல்பெட்டா நகரை அதன் பனிக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.



Click it and Unblock the Notifications