பள்ளிக்குண்ணு என்றழைக்கப்படும் இந்த சிறுநகர்ப்பகுதி பாரம்பரிமிக்க ஒரு கல்விநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.
கண்ணூர் - பய்யனூர் சாலையில் உள்ள இந்த புறநகர்ப்பகுதி சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. பேருந்துகள், டாக்சிகள் அல்லது ஆட்டோ மூலமாக பயணிகள் பள்ளிக்குண்ணுவை அடையலாம்.
இந்நகருக்கு அருகிலேயே உள்ள 1200 வருடங்கள் பழமையான ஸ்ரீ மூகாம்பிகா கோயிலுக்கும் இந்நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது, மூகாம்பிகா அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் நவராத்திரி திருவிழாவின் போது ஏராளமான பக்தர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.
இது மட்டுமல்லாமல் கிருஷ்ணமேனன் மெமோரியல் அரசு பெண்கள் கல்லூரி மற்றும் கேரள தொழிற்பயிற்சி மையம் போன்றவை இந்த சிறு நகரத்தில் அமைந்துள்ளன.
கண்ணூர் மத்திய சிறைச்சாலை இந்தப்பகுதியில் அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசுத்தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையம் போன்ற முக்கியமான ஸ்தாபனங்களும் இங்கு அமைந்துள்ளன.
சிறைக்கண்காணிப்பாளர் இல்லம் மற்றும் கிருஷ்ணமேனன் மெமோரியல் அரசு பெண்கள் கல்லூரி போன்றவை இயங்கும் ஒரு வரலாற்றுப் பாரம்பரியமிக்க மாளிகையும் இந்த பகுதியின் முக்கிய அம்சமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications