ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உதய்பூர் ஒரு மனதை மயக்குகிற சுற்றுலாத்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 2523 மீட்டர் உயரத்திலுள்ள உதய்பூர், மயர் (mayar) கால்வாயின் குறுக்குவெட்டில் உள்ளது. முன்பு இவ்விடம் மர்குல் அல்லது மற்குல் என்று அழைக்கப்பட்டு பின் 1695-ஆம் வருடம் சம்பாவின் ராஜா உதய் சிங் மூலம் உதய்பூர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முழு கிராமமும் நீல நிற பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு உலர்ந்த பழங்கள் மற்றும் அக்ரூட் பருப்புகள், சர்க்கரை பாதாமி, ஆப்பிள்கள் வளர்கின்றன. 1939-ஆம் ஆண்டு இங்கு வந்த புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் கோஎட்ஸ் கிராமத்தின் இயற்கை அழகை பாராட்டியதோடு இங்குள்ள காட்சி அமைப்பை சுவிஸ் மலைப்பகுதியோடு ஒப்பிட்டுள்ளார்.
இவ்விடம் த்ரிலோக்நாத் மற்றும் மர்குல தேவி கோயில்களுக்கு பெயர் போனது. இவ்விரு வழிபாட்டு தலங்களும் நாடு முழுவதுமுள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications