சதுர்புஜ் கோயில், கஜுராஹோ

சதுர்புஜ் கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் தென் தொகுதி கோயில்களில் இடம்பெற்றுள்ளது. இது 1100ம் வருடம் கட்டப்பட்ட கோயிலாகும். மேற்குத்திசையை நோக்கியவாறு வீற்றுள்ள இந்த கோயில் 10 படிகளில் ஏறிச்சென்றடையும் வகையில் ஒரு பீடம் போன்ற அமைப்பின்மீது கட்டப்பட்டிருக்கிறது.

விரிவான அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த நுழைவாயில் அமைப்பையும் இது கொண்டுள்ளது. இந்த வாயில் அமைப்பிலேயே பிரம்மா, விஷ்ணு மற்றும் ஈசன் ஆகிய மும்மூர்த்திகளின் உருவங்கள் காணப்படுகின்றன.

9 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் விஷ்ணு சிலை இக்கோயிலின் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் மற்றும் சிவனின் அர்த்தநாரீஸ்வர அவதாரம் போன்ற சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.

கருவறை, ஷிகாரா, அர்த்தமண்டபம் மற்றும் மஹாமண்டபம் போன்ற அங்கங்கள் இந்த கோயிலில் வடிவமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

புராணபாத்திரங்களின் சிலைகளும் இங்குள்ள சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சதுர்புஜ் கோயில் பார்வையாளர்களை பிரமிக்கவைக்கும் இயல்புடன் வீற்றிருக்கிறது.

Please Wait while comments are loading...