லஷ்மணா கோயில், கஜுராஹோ

லஷ்மணா கோயில் மஹாவிஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அற்புதமான கோயிலாகும். மிகப்புராதனமான இந்த கோயில்  கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் மேற்குத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

930-950ம் ஆண்டுகளில் கட்டப்பட்டு இன்றும் மெருகு  குலையாமல் இந்த கலைப்படைப்பு வீற்றிருக்கிறது. இந்த கோயிலில் 600க்கும்  மேற்பட்ட இந்து தெய்வச்சிலைகள் உள்ளன.

கோயிலின் பீட அமைப்பில் யானை குதிரை போன்ற உருவங்கள் புடைப்புச்சித்திரங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு சிறு சன்னதிகள் அல்லது கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அப்சரஸ்கள் எனப்படும் அழகு மங்கையரின் சிற்பங்கள் வெவ்வேறு அபிநயக்கோலங்களில் சிருங்கார அம்சத்துடன் இங்கு வடிக்கப்பட்டிருக்கின்றன. இவை இந்த கோயிலின் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றன. மேலும் சில காதற்கலை காட்சிகளை சித்தரிக்கும் சிற்பச்செதுக்கல்களையும் இந்த கோயிலில் பார்க்க முடிகிறது.

Please Wait while comments are loading...