லஷ்மி கோயில், கஜுராஹோ

சுபிக்ஷம் மற்றும் செல்வத்திற்கான கடவுளாகிய லட்சுமி தேவிக்காக உருவாக்கப்பட்டிருக்கும்  இந்த லட்சுமி கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் மேற்குத்தொகுதி கோயில்களில் இடம் பெற்றுள்ளது.

900-925ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் அளவில் சிறியதாக அதே சமயம் தனித்தன்மையான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. இதில் உள்ள தெய்வச்சிலை மஞ்சள் கருங்கல்லால் வடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சதுர வடிவ பீட அமைப்பின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் ஒரு அற்புதமான கலைப்படைப்பாக காட்சியளிக்கிறது. படிக்கட்டுகள் மற்றும் கோபுரத்தின் அலங்கார நுணுக்கங்கள் யாவுமே வித்தியாசமான அம்சங்களை கொண்டிருப்பதும் வியக்கத்தக்கது.

Please Wait while comments are loading...