விஸ்வநாத் கோயில், கஜுராஹோ

விஸ்வநாத் கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு அற்புதமான சலவைக்கல் சிவலிங்கம் இதில் தெய்வீக கருவறை அம்சமாக வணங்கப்படுகிறது. தங்க தேவா என்பவரால் கட்டப்பட்ட இந்த கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் மேற்குத்தொகுதி கோயில்களில் அடங்கியுள்ளது.

பஞ்சயதன் பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் தனது நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய துணைக்கோயில் அமைப்புகளுடன் காட்சியளிக்கிறது. 600க்கும் மேற்பட்ட பாறைச்சிற்பங்கள் இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன.

ஒரு அழகிய பிரம்மா தெய்வ சிலையையும் இங்கு தரிசிக்கலாம். இந்த சிலைக்கு வடதிசையில் சிங்க உருவங்கள் மற்றும் தெற்குத்திசையில் யானை உருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

மேலும் கோயிலின் சுவர்ப்பகுதிகளில் வடிக்கப்பட்டிருக்கும் அழகு மங்கையர் சிற்பங்களும் இதன் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளன. 6 அடி உயர நந்தி சிலை ஒன்றும் இங்கு மேடை அமைப்பின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறது.

Please Wait while comments are loading...