கொச்சி நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் உள்ள சிறு தீவுக்கிராமமே இந்த கும்பாலங்கி ஒருங்கிணைந்த சுற்றுலா கிராமம் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுற்றுலா அம்சங்களுக்காக இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. அமைதியான கழிமுக நீர்த்தேக்கத்தை கொண்டுள்ள இந்த தீவானது, படகுச்சுற்றுலாவுக்கும், மீன்பிடிப்பு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்ற ஸ்தலமாக திகழ்கிறது.
‘ஒருங்கிணைந்த சுற்றுலாக்கிராமத்திட்டம்’ செயல்படத் துவங்கியபிறகு இப்பகுதியில் கடல்சார் பணிகள் அதிக அளவில் முன்னேற்றமடைந்துள்ளன. இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்படுத்தப்படும் சுற்றுலா வளர்ச்சித் திட்டமான இது கும்பலங்கி கிராமத்தை ஒரு மாதிரி மீன்பிடி கிராமமாகவும் அதே சமயம் முக்கியமான முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் மாற்றும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இப்பகுதியின் இயற்கை எழில் மற்றும் படகுச்சுற்றுலா போன்ற அனுபவங்களில் தங்கள் மனதை பறி கொடுக்காமல் திரும்புவதில்லை.
மீன் உற்பத்திப்பண்ணை, தென்னை நார் திரிப்பு மற்றும் பல கடல் சார் பொழுதுபோக்கு அம்சங்களையும் இங்கு பயணிகள் ரசித்து அனுபவிக்கலாம். இந்த தீவுச்சுற்றுலாத்திட்டத்தின் ஒரு அங்கமாக பகல் நேர படகுச்சுற்றுலா, இரவுநேர படகுச்சுற்றுலா மற்றும் பண்பாட்டுக்கலை நிகழ்ச்சிகள் போன்றவை சுற்றுலாத்துறையினராலேயே நடத்தப்படுகின்றன.
இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா கிராமத்துக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யலாம். இருப்பினும் மழைக்காலத்தை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications