பறவை ரசிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த மங்களவனம் பறவைகள் சரணாலயம் ஆகும். இது எர்ணாகுளத்தில் உயர்நீதிமன்றத்துக்கு பின்புறம் உள்ளது. பல அரிய வகை புலம்பெயர் பறவைகள் மற்றும் வசிப்பிட பறவைகளை இந்த சரணாலயத்தில் காணலாம்.
பறவைகள் மட்டுமன்றி புதர்க்காடுகளால் ஆன இந்த சரணாலயத்தில் பலவகை தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்களையும் பார்க்கலாம். இப்பகுதி கொச்சி உப்பங்கழிப்பகுதியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
பல அரிய வகை தாவரங்களையும் பறவையினங்களையும் கொண்டுள்ளதால் 2004ம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனச்சரகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமையான சதுப்பு நிலப்பகுதியான இது எர்ணாகுளம் பகுதியின் சுவாசப்பை என்றே அழைக்கப்படுகிறது.
ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாத பாதி வரை இங்கு அதிக அளவில் புலம்பெயர் பறவைகள் வருகை தருவதால் அப்பருவத்தில் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications