கொச்சியிலுள்ள மரைன் டிரைவ் மும்பையிலுள்ள மரைன் டிரைவ் பகுதியின் நகலைப்போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மரைன் டிரைவ் பகுதியிலுள்ள புராமினேட் என்னும் தளத்திலிருந்து கொச்சி கழிமுகப்பகுதியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் அதிக அளவில் விருப்பத்துடன் வந்து ஓய்வெடுக்கும் இடமாக இது திகழ்கிறது. ஞாயிற்றுகிழமை மாலை வேளைகளில் மக்கள் திரளாக சூரிய அஸ்தமனத்தை பார்க்க கூடுகின்றனர்.
மரைன் டிரைவ் பகுதி கொச்சியின் முக்கிய பொருளாதார கேந்திரமாகவும் இயங்குகிறது. நிறைய ‘மால்’கள் (ஷாப்பிங் வளாகம்) இந்த மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ளதால் பயணிகள் உல்லாசமாக ஷாப்பிங் செய்வதற்கும் இது ஏற்றதாக உள்ளது.
மரைன் டிரைவ்’க்கு அருகிலேயே கொச்சியின் முக்கிய சாலையான எம்.ஜி ரோடு அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற கயீஸ் பிரியாணி உணவகம் உள்ளிட்ட பிரபலமான உணவகங்கள் அமைந்துள்ளன. கொச்சிக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த கயீஸ் பிரியாணியை ருசி பார்ப்பதும் அவசியம்.



Click it and Unblock the Notifications