கேரளாவிலுள்ள பழமையான கிறித்துவ தேவாலயங்களில் இந்த செயிண்ட் மேரி கதீட்ரல் பஸிலிகாவும் ஒன்றாகும். முற்காலத்தில் 112 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இது 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார் லூயி பழம்பெரம்பில் என்பவரால் மறு நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது.
1974ம் ஆண்டில் போப்பாண்டவர் ‘நான்காம் பால்’ இந்த தேவாலயத்திற்கு பஸிலிகா அந்தஸ்தை வழங்கியுள்ளார். துவக்கத்தில் ‘ லேடி ஆஃப் போர்ட்ஸ்’ என்று பூஜிக்கப்பட்ட இந்த ஆலயம் தற்காலத்தில் மேரி மாதா ஸ்தலமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரோமன் பஸிலிகா பாணியில் எழுப்பப்பட்டுள்ள இந்த தேவாலயம் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. பயணிகளும், பக்தர்களும் இங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கவும், ஆலயத்தை சுற்றிப்பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். எர்ணாகுளம் டவுனுக்கு அருகிலேயே இந்த சர்ச் அமைந்துள்ளதால் மிக எளிதாக பயணிகள் இங்கு சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications