திருவனந்தபுரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த விழிஞ்சம் பாறைக்குகைகள் அல்லது குடைவறைக்கோயில்கள் அமைந்துள்ளன. விழிஞ்சம் எனும் கிராமத்தில் காணப்படும் இந்த பாறைக்குகைகளில் பாறைச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெகு சமீப காலத்தில்தான் இவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தம் அடைந்துள்ளன.
இங்கு வினாந்தர தட்சணாமூர்த்தியின் சிலையைக் கொண்டுள்ள குகைக்கோயில் ஒரே பாறைக்கல்லில் குடையப்பட்டுள்ளது. இக்கோயிலின் வெளிப்புறத்தில் சிவன் மற்றும் பார்வதியின் சிற்பங்கள் முடிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன.
கோவளம் கடற்கரைப்பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விழிஞ்சம் பாறைக்குகைகள் அவசியம் பார்க்கவேண்டிய சுற்றுலா அம்சமாகும். திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை இங்குள்ள குகைக்கோயில் திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications