Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » விழிஞ்சம் கிராமம்

விழிஞ்சம் கிராமம், கோவளம்

39

கேரள மாநிலத்திலுள்ள விழிஞ்சம் கிராமம் கோவளம் நகரிலிருந்து 3கி.மீ தூரத்திலேயே உள்ளது. இந்த கிராமம் இங்குள்ள ஆயுர்வேத மசாஜ் மையங்களுக்கும், பீச் ரிசார்ட் விடுதிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அம்சங்களுக்காகவே சர்வதேச அளவில் இந்த விழிஞ்சம் கிராமம் புகழ் பெற்றிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், ஒரு இயற்கையான துறைமுகத்தை தரிசிக்க விரும்பினால் நீங்கள் வரவேண்டிய இடமும் இந்த விழிஞ்சம் கிராமம்தான். தமிழகத்தின் ‘புகார் நகரம்’ போன்று பண்டைய காலத்தில் ஒரு முக்கியமான கடல் வாணிபக்கேந்திரமாகவும் துறைமுகமாகவும் இந்த விழிஞ்சம் கிராமம் திகழ்ந்திருப்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் சமீபத்தில் கிடைத்துள்ளன.

ரோமானியர் காலத்திலேயே செங்கடல் கடற்பகுதியில் உள்ள நாடுகளோடு விழிஞ்சம் பகுதி கடல்வாணிபத் தொடர்புகளைக்கொண்டிருக்கலாம் என்பதாக வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிறது.

14ம், 15ம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் இப்பகுதிக்கு வாணிபம் செய்ய வருகை தந்துள்ளனர். இந்த கிராமத்தில் கடலுக்கு அருகிலேயே உள்ள ஒரு புராதன போர்த்துகீசிய தேவாலயம் இதற்கான வரலாற்றுச்சான்றாய் எஞ்சி நிற்கிறது. இதுவே விழிஞ்சம் கிராமத்தின் மிகப்பழமையான தேவாலயமும் ஆகும்.

நேரமும் விருப்பமும் இருப்பின் இங்குள்ள ஆயுர்வேத மூலிகை எண்ணெய் குளியல்கள் மற்றும் மசாஜ் சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் நிச்சயமாக புத்துணர்ச்சியை அளிக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed