குதுரேமுக் தேசியப்பூங்கா குதுரேமுக் ஸ்தலத்தின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1987ம் ஆண்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டு இது 600 ச.கி.மீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது.
டாக்டர். உல்லாஸ் கரந்த் என்ற புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானியின் முயற்சியின் பேரில் அவர் கர்நாடக அரசுக்கு சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த ‘வறண்டபிரதேச - பசுமைமாறா – ஈர வனப்பகுதி’யானது பாதுகாக்கப்பட்ட தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.சர்வதேச புலிகள் பாதுகாப்பு திட்டத்திற்கான காட்டுப்பூங்காவும் இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர குத்ரேமுக் தேசியப்பூங்காவானது WILDLIFE CONSERVATION POLICY ( WCS) மற்றும் WORLD WILD FUND (WWF) போன்ற அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்ட காட்டுப்பூங்காவாக உள்ளது.
இந்த காட்டுப்பூங்காவில் சாம்பார் மான், சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, புலிகள், காட்டு நாய்கள் மற்றும் சிறுத்தைகள் வாழ்கின்றன. இந்த தேசியப்பூங்காவினுள் நுழைந்து சுற்றிப்பார்க்க வனத்துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.குதுரேமுக் தேசியப்பூங்காவிற்கு அருகில் பயணிகள் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் இல்லம் உள்ளது. இந்த தேசிய பூங்காவிற்கு பயணிகள் பேருந்து, ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்கள் மூலம் செல்லலாம்.



Click it and Unblock the Notifications