குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு சுற்றுலா அம்சம் இந்த பிலாத்வாரா குகை ஆகும். புராணக் கதைகளின்படி கருடனிடமிருந்து தப்பித்து வாசுகிப்பாம்பு இங்கு பதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குமாரதாரா ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த குகையில் இயற்கையாகவே அமைந்த நுழை வாசலும் மற்றும் வெளி வாசலும் காணப்படுகின்றன. இந்த குகை 10 மீட்டர் நீளமும் 30 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. சுற்றிலும் அழகான பூங்காத்தோட்டத்தைக் கொண்டுள்ள இந்த குகைக்கு வாசுகிப்பாம்பின் அருளைப்பெற வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications