Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » பீஷ்ம குண்ட்

பீஷ்ம குண்ட், குருக்ஷேத்ரா

50

தானேசர் பகுதியில் நர்காதரி எனும் இடத்தில் இந்த பீஷ்ம குண்ட் அமைந்துள்ளது. பிதாமகர் என்று கௌரவர்களாலும் மதிக்கப்பட்டவர் பீஷ்மர். கௌரவர்கள் பக்கம் இவர் வாழ்ந்தாலும் பாண்டவர்கள் இவர்கள் பெரிதும் மதித்தனர்.

இவர் தான் விரும்பும் வரை வாழ்ந்து, விரும்பும் போது மரணமடையலாம் எனும் அற்புத சித்தியை வாய்க்கப்பெற்றிருந்தார் என்று புராணிகம் குறிப்பிடுகிறது. எனவே குருக்ஷேத்ரப்போரின்போது இவரது வலிமை குறித்து பாண்டவர்களுக்கு சிறிது அச்சம் இருந்தது.

இவரை எப்படி சமாளிப்பது என்று வழக்கம்போல் பாண்டவர்கள் கிருஷ்ணரது வழிகாட்டலை நாடினர். அவரும் பீஷ்மரை வீழ்த்த ஒரு எளிதான ஒரு உபாயத்தை கூறினார்.

அதாவது ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத சிகண்டி எனும் அலியுடன் பீஷ்மரை போரிட வைக்கும்பட்சத்தில் அவர் அப்படி ஒரு எதிரியுடன் போரிடுவதைவிட மரணமடையவே விரும்புவார் என்பதுதான் அந்த உபாயம்.

இந்த திட்டப்படியே சிகண்டி முன்னிருந்து பீஷ்மரிடன் போரிடும்போது அர்ஜுனன் அவர் பின்னிருந்து அம்பு மழைபொழிந்தார். சிகண்டி முன்னால் போரிடவிரும்பாத பீஷ்மர் தன் ஆயுதங்களையும் கவசத்தையும் கழற்றி எறிந்தார்.

அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு அவர் தனது மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் மஹாபாரதப்போரின் பத்தாவது நாளில் நிகழ்ந்ததாக இதிகாசத்தில் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவத்தின் மூலம் ஒரு அற்புதமான உண்மையை மஹாபாரத இதிகாசம் முன்வைக்கிறது. அதாவது சூழ்நிலை காரணமாக கெட்டவர்கள் பக்கம் இருந்து நல்லவர்களை எதிர்த்து போரிட நேரிட்டாலும் நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இந்த பாத்திரங்களின் மனதில் இருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சுற்றிலும் கௌரவர்களும் பாண்டவர்களும் சூழ்ந்திருக்க அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தாகமெடுக்கிறது என்றார். உடனே அர்ஜுனன் ஒரு அம்பை பூமிக்குள் எய்து ஒரு நீரூற்றினை வரவைத்து அவரது தாகம் தீர்த்தார்.

அந்த ஊற்று உருவான இடம் தான் இப்போது பீஷ்ம குண்ட் என்று அழைக்கப்படும் ஸ்தலமாக அறியப்படுகிறது. மேற்சொன்ன சம்பவத்தின் அடையாளமாக ஒரு கோயிலும் இப்பகுதியில் இருந்து வருகிறது. மேலும் இங்கு ஒரு படிக்கிணறு ஒன்றும் உள்ளது. இது தற்போது புதுப்பிக்கப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed