புராதன நகரமான குருக்ஷேத்ரா வெகு காலமாக ஹிந்து புராணிக மரபில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக இருந்து வருகிறது. இருப்பினும் பிற்காலத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஞானிகள், யோகிகள் ஆகியோர் விரும்பி விஜயம் செய்த நகரமாகவும் இது இருந்துள்ளது.
புத்தர் இந்த நகரத்துக்கு விஜயம் செய்து பிரச்சாரம் செய்ததை நினைவுறுத்தும் பல சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன. இவை யாவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். எனவே குருக்ஷேத்ரா நகரம் பௌத்த மார்க்கத்தை பின்பற்றுவர்களுக்கும் ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இருந்து வருகிறது.



Click it and Unblock the Notifications