தரோஹார் ஹரியானா மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஹரியானா நாட்டுப்புற கலை மற்றும் பாரம்பரிய மையம் அமைந்துள்ளது. உலகெங்கிலுமிருந்தும் பார்வையாளர்கள் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர்.
ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, ரஷ்யா, சிலி, மலேஷிய, மொரிஷியஸ், டென்மார்க், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் மற்றும் தென்அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த அருங்காட்சியகத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட புராதன அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் தவிர இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், இலக்கியம், மரபு, கட்டிடக்கலை, கல்வி, அரசியல் மற்றும் வரலாறு குறிந்து தெரிந்துகொள்ள விரும்பும் ஆராய்ச்சியாளர்களும் இங்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications