வால்மீகி ஆஷ்ரம் எனும் இந்த ஆன்மீக வழிபாட்டுத்தலம் வால்மீகி முனிவரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரே ராமாயண மஹாகாவியத்தை எழுதியவர் ஆவார்.
வால்மீகி ஆஷ்ரம வளாகம் முழுதுமே வெள்ளை வண்ணம் பூசப்பட்டும், வெண் பளிங்குக்கற்களால் அலங்கரிக்கப்பட்டும் தூய்மையையும் அமைதியையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இங்குள்ள யோகிகள் ராமாயண காவியத்தின் சிறப்பம்சங்களை போதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நாட்டின் இதர பகுதிகளில் காணப்படும் மற்ற வால்மீகி ஆசிரமங்களைப்போலவே இந்த ஆசிரமத்திற்கும் நிஷான் சாஹிப் எனப்படும் ஒரு பிரத்யேக கொடி உள்ளது. வில் மற்றும் அம்பு பொறிக்கப்பட்டுள்ள இலச்சினை இந்த கொடியில் காணப்படுகிறது.
இந்த வில் அம்பு இரண்டும் ராமனின் புதல்வர்களும் வால்மீகியின் சீடர்களுமான லவா மற்றும் குசாவை குறிக்கின்றன. தினமும் இந்த ஆசிரமத்தில் ஆரத்தி பூஜையும் செய்விக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications