Search
  • Follow NativePlanet
Share

மஹொபா - திருவிழாக்களின் நகரம்!

12

உத்தர பிரதேசத்தில் உள்ள சிறிய மாவட்டமான `மஹொபா' வரலாற்று புகழ் பெற்றது. `பண்டல்கண்ட்' பகுதியில் அமைந்துள்ள மஹொபா, கஜுராஹோவுடன் கலாச்சார தொடர்புடையது. இங்கு  சாண்டெலா ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட சிற்றின்ப குகைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. இது 10 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் பண்டல்கண்ட் பிராந்தியத்தை ஆண்ட சாண்டெல் ராஜபுத்திரர்களின், தலைநகராக இருந்தது. மஹொபா என்கிற வார்த்தை 'மஹோத்சவ்' என்கிற வார்த்தையிலிருந்து உருவானது. அதற்கு  பெரிய விழாக்களின் நகரம் எனப் பொருள்.  

மஹொபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

மஹொபாவில் பல சுவாரஸ்யமான நினைவு சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் சமய தலங்கள் உள்ளன. குக்ஹர் மலைச்சரிவில் அமைந்துள்ள சிவாலயம் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த கோவிலில் தாண்டவ கோலத்தில் சிவனின் சிலை உள்ளது. மதன் சாகர் ஏரியின் மத்தியில் அமைந்துள்ள தீவில் உள்ள கக்ரமாத் கோவில் பக்கதர்களை பெரிதும் ஈர்க்கிறது. இங்கு உள்ள ராஹிலா சாகர் சூரியன் கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

இது ராஹிலா சாகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள சண்டிகா  தேவி கோவில் மற்றும் கோக்ஹர் பர்வதத்தில்  இந்து, சமண மற்றும் புத்த மதம் சம்பந்தப்பட்ட  சன்னதிகள் உள்ளன.

மஹொபாவை எவ்வாறு அடைவது?

மஹொபாவை விமானம், ரயில் மற்றும் சாலை மார்கமாக எளிதில் அடையலாம்.

மஹொபா சிறப்பு

மஹொபா வானிலை

சிறந்த காலநிலை மஹொபா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மஹொபா

  • சாலை வழியாக
    மஹொபா தேசிய நெடுங்சாலை 76 மூலம் இந்த மாவட்டத்தின் பிற கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களான ஸூபா, மற்றும் குல்பஹட் போன்றவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மஹொபா - கஜுராஹோ ரயில் இணைப்பு 2008-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. எனவே தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து செல்லும் பல ரயில்கள் இதன் வழியாகச் செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மஹொபா அருகில் உள்ள விமான நிலையம் கஜுராஹோ விமான நிலையம் ஆகும். இது மஹொபாவில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் சாத்னாவிமான நிலையம் இங்கிருந்து 131 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து, நீங்கள் ஒரு பேருந்து அல்லது ஒரு டாக்சி மூலம் மஹொபாவை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Apr,Mon
Check Out
28 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue