Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்பே » ஈர்க்கும் இடங்கள் » மால்பே கடற்கரை

மால்பே கடற்கரை, மால்பே

12

மால்பே நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குவியும் இடம் இந்த மால்பே கடற்கரையாகும். உள்ளூர் மக்களால் கூட அதிக விரும்பப்படும் இந்த கடற்கரைப்பகுதியில் சுவையான உணவுப்பண்டங்களை விற்கும் உணவகங்கள் அதிகம் உள்ளன.

 

கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு விழாக்களும் இந்த கடற்கரையில் அடிக்கடி நிகழ்த்தப்படுகின்றன. இங்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் சமீப காலமாக பெருமளவில் உயர்ந்துள்ளது.

பயணிகள் இந்த கடற்கரைப்பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, வலை மீன் பிடிப்பு போன்ற பல வகையான பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடலாம். கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ள விடுமுறை விடுதிகள் தங்கும் வசதிகளையும் இன்ன பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன.

மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. இதமான காற்றும், அசைந்தாடும் பனை மரங்களும் சிறிதான அலைகளும் இந்த கடற்கரையின் எழில் அம்சங்களாக திகழ்கின்றன. இங்கிருந்து மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது.

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்திலேயே மால்பே கடற்கரை அமைந்துள்ளது. உடுப்பி ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது. மேலும் சாலை வழியாக வெகு விரைவில் நீங்கள் மால்பே கடற்கரையை அடையலாம். உடுப்பியிலிருந்து மால்பே’க்கு அடிக்கடி பஸ் வசதிகளும் உள்ளன. மால்பே பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்திலேயே மால்பே கடற்கரை உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue