கடல் மட்டத்திலிருந்து 4772 மீ உயரத்தில் உள்ள கம்லாஹ் எனும் கிராமத்தில் கம்லாஹ் ஃபோர்ட் அமைந்துள்ளது. கம்லாஹ் கிராமம் ஹமிர்பூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
சிகந்தர் தர் மலைகளின்மீது வீற்றிருக்கும் இந்த கோட்டையானது மண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜா சூரஜ் சேன் என்பவரால் 1625ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. 1840ம் ஆண்டு மஹாராஜா ரஞ்சித் சிங்கின் தளபதியான பெண்டுரா என்பவரால் இந்த கோட்டை சிதைக்கப்பட்டிருக்கிறது.
பின்னர் 1846ம் ஆண்டு மீண்டும் மண்டி பகுதியை ஆண்ட மன்னர்களால் இக்கோட்டை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் வசித்த கம்லாஹ் பாபா என்பவரின் பெயரில் இந்த கோட்டை அழைக்கப்பட்டு வருகிறது.
முற்காலத்தில் 350 பீகா பரப்பளவில் அமைந்திருந்த இந்த கோட்டைப்பகுதி தற்போது 110 பீகா பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. நவுன், கதேட், ஜமந்தர், சம்பா மற்றும் ஷாம்ஷெர்பூர் போன்ற முக்கியமான கிராமங்கள் இந்த கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளன.
மண்டியிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோட்டையை சாகச அனுபவங்கள் நிறைந்த மலையேற்றபாதை மூலமாக பயணிகள் சென்றடையலாம். சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வுகளின்போது சில மனித எலும்புக்கூடுகளும் கம்லாஹ் கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications