கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.
கொடச்சத்ரி குன்றும், தென்னஞ்சோலைகளும் மரவந்தேவின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கடற்கரைக்கு சுற்றுலா வர ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications