ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயிலைப் போன்றே புதேஷ்வர் மஹாதேவ் கோயிலும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இந்தியாவின் பழம்பெரும் கோயில்களுள் ஒன்றாகும்.
சிவராத்திரி போன்ற முக்கிய விசேஷங்களின் போது, பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தம் பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர். கிருஷ்ண பகவான் இங்கு அவதரித்ததாகச் சொல்லப்படுவதனால் பெரும்பாலான கோயில்கள் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்நகரில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிகச் சில கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications