கன்ஸ் குயிலா, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. பழைய கோட்டை சிதிலமடைந்து காணப்பட்டாலும், அது புகழின் உச்சியில் இருந்த காலத்தில், கிருஷ்ண பகவானின் தாய் மாமனாகிய கம்சன் எனும் அசுரனின் வாழ்விடமாக இருந்துள்ளது.
இக்கோட்டை மிகப் பெரும் நிலப்பரப்பில், ஓங்கி உயர்ந்த அரண் போன்ற கோட்டைச் சுவர்களோடு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம், இந்து மற்றும் இஸ்லாமிய கட்டுமான பாணிகளின் அழகிய கலவையாகக் காட்சியளிக்கிறது.
இது ஏனெனில், இக்கோட்டை, அதன் இத்தனை வருடகாலப் பயணத்தில் பல்வேறு கைகள் மாறி வந்துள்ளது. ஆம்பரைச் சேர்ந்த ராஜா மன் சிங் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோட்டையை சீர்செய்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஹாராஜா சவாய் ஜெய் சிங் ஒரு ஆய்வு நிலையத்தை இங்கு நிர்மாணித்துள்ளார். ஆனால், தற்போது இந்த ஆய்வு நிலையம் இருந்ததற்கான சுவடே இல்லை.



Click it and Unblock the Notifications