இந்து மதம் மதுராவை ஆகர்ஷிக்கும் முன் இவ்விடம் பௌத்தம் மற்றும் ஜைன மதங்கள் கோலோச்சிய மையமாக இருந்துள்ளது. பெரும்பாலான புத்த விகாரங்கள் மற்றும் கோயில்கள் பிற்காலத்தில் மொகலாய மன்னர்களால் அழிக்கப்பட்டிருப்பினும், அவற்றுள் சில தற்போதும் கம்பீரமாக நின்று யாத்ரீகர்களை வருடந்தோறும் இங்கு ஈர்க்கக்கூடியனவாகத் திகழ்கின்றன.
ஜைனக் கோயிலான மதுரா சௌராசி என்பது மதுராவில், ஜைன கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் புகலிடமாக விளங்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் ஜைன வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இந்த புனித திருத்தலம் ஒரு காடு மற்றும் யமுனை நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
இக்கோயில், சுவரில் வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்டு அசல் ஜைன பண்பாடு மற்றும் கலையின் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
இது அகலமான ஒரு செவ்வகம் போன்ற நிலப்பரப்பின் குறுக்காக, ஒவ்வொன்றிலும் சுமார் அறுபது அறைகள் கொண்ட இரண்டு தர்மசாலாக்களைக் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது.
இந்த அறைகள் இங்கு தங்கும் விருந்தினர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவாறு சகல வசதிகளும் நிறைந்தனவாய் உள்ளன.பரிந்துரை: சென்று வரலாம்



Click it and Unblock the Notifications