நாம் யோக் சாத்னா மந்திர், தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சுவாமி ஜெய் குருதேவ் அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான சைவ உணவு முறையைப் பின்பற்றி, இச்சை, கோபம், பேராசை, பற்று மற்றும் அகந்தை ஆகியவற்றைக் களைந்து, உயர்வான நிலை அடைவதற்கு வழி வகை செய்யக்கூடிய எளிமையான வாழ்க்கை முறை வாழ்வதற்கு குருதேவ் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த மந்திரில் உள்ள ஸ்தூலங்கள் மற்றும் கம்பீரமான தூண்கள் ஆகியவை இந்து பாணி கட்டுமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
இக்கோயில், இங்கு ஆண்டிற்கொரு முறை நடைபெறும் விழாவான, சமைக்கப்பட்ட உணவு வகைகள் யாத்ரீகர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு விநியோகிக்கப்படும் பந்தாரா திருவிழாவுக்கு மிகவும் பிரபலமானதாகும்.
இந்த மந்திர், இலவச மருத்துவ உதவிகள் வழங்கியும், ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியும், தொண்டாற்றும் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறது.
மேலும் இந்த மந்திர் நிதிநிலையில் பின்தங்கிய மக்கள் பயனடையும் வகையில் அவர்களின் குழந்தைகளுக்காகவே ஒரு பள்ளியை நடத்தி வருகிறது. இந்த சேவைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications