ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள ஒரு அழகிய கற்கோயிலாகும். இது மதுரா நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சுவர்களில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டு, எளிமையான இந்து பாணி கட்டிடக்கலையை பிரதிபலிக்கின்றது.
நகரில் உள்ள மிகச் சில சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில், மதுரா கிருஷ்ணனின் பிறப்பிடம்; இங்கு இந்து மதம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் அவரை மையப்படுத்தியே இருந்து வந்ததனால் பிற தெய்வங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.



Click it and Unblock the Notifications