பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மைதானம் என்றழைக்கப்படும் இது நாட்டின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாகும். 1993ல் உருவாக்கப்பட்ட இது உலகத்தரமான வசதிகளைக் கொண்டது. 45000பேர் அமரக்கூடிய வகையில் உள்ள இந்த மைதானத்தில் மாநில விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்திய-தென் ஆப்ரிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கு 1993 நவம்பரில் நடந்தது. பின்னர் 1994 டிசம்பரில், மேற்கிந்திய தீவிற்கும் இந்தியாவுக்குமான டெஸ்ட் மேட்ச் நடந்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் களமாக இந்த மைதானம் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications