Search
  • Follow NativePlanet
Share

மான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்!

7

வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி அமைந்துள்ளது. உண்மையாகவே இந்த உலகத்தின் அமைதியை மான் பகுதியில் அனுபவிக்கலாம். ஏனெனில் மான், நகர வாழ்க்கையின் நரகச் சூழல்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு சென்றாலே ஒரு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள நாகாலாந்து மாநிலத்தில், மான் மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் வடக்கு பகுதியில் அஸ்ஸாம், தெற்கு பகுதியில் மியான்மர் மற்றும் மேற்கு பகுதியில் மோக்கோக்சுங் மற்றும் டியுவென்சங் போன்ற பகுதிகள் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம்

மான் ஒரு சிறந்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் மான் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த கலாச்சாரம் பண்பாட்டின் சொர்க்கமாகவே விளங்குகிறது என்று சொல்லலாம்.

மான் மாவட்டத்தில் கன்யாக்ஸ் என்ற இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் போர் புரியும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதன் அடையாளமாக தங்கள் உடலில் பச்சை குத்தியிருப்பர்.

இங்கு இருக்கும் கிராமங்களில் வாழும் கன்யாக்ஸ் ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரியத்தைக் கைவிடாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஏராளமான ஆபரணங்களைத் தங்கள் உடலில் அணிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மிகப் பெரிய வளையங்களைத் தங்கள் காதுகளில் அணிந்திருக்கின்றனர்.

கன்யாக்ஸ் இனத்தில் தென்டு மற்றும் தென்தோ என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. தென்டு மக்கள் தங்கள் முகத்தில் பச்சை குத்தியிருப்பார்கள். அதை வைத்து அவர்கள் தென்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

ஆனால் தென்தோ பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்கள் முகத்தில் பச்சை குத்தாமல், வெள்ளை முகத்துடன் காணப்படுவார்கள். இதை வைத்து அவர்கள் தென்தோ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

தென்டு பிரிவைச் சேர்ந்த மக்கள் மான் மாவட்டத்தில் இருக்கும் டோபு பகுதியின் கீழ் பகுதியிலும், தென்தோ பிரிவைச் சேரந்தவர்கள் டோபு பகுதியின் மேல் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தென்டு மக்களின் ஆட்சியாளர்கள் ஆன்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த தென்டு மக்களை அவர்களின் பச்சை குத்தப்பட்ட முகங்களைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

விழாக்காலம்

ஏப்ரல் மாதம் கன்யாக்ஸ் மக்களின் விழாக்காலம் ஆகும். இந்த மாதத்தில் எவோலியோன்க் மான்யு என்று ஒரு பெரிய விழாவைக் கொண்டாடுவர்.

ஒரு வாரம் நடைபெறும் இந்த விழா அறுவடை விழாவாக அல்லது வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகக் கொண்டடப்படுகிறது. மான் பகுதிக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் ஏப்ரல் மாதத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்.

மான் சிறப்பு

மான் வானிலை

சிறந்த காலநிலை மான்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மான்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 61, கோஹிம்மாவில் தொடங்கி மொக்கோக்சுங் மாவட்டத்தில் உள்ள டுளி என்ற இடத்திற்கு செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை மான் மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை பல முக்கியமான பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜார்ஹட்டிலிருந்து மான் பகுதிக்கு பேருந்தில் சென்றால் அது ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மான் பகுதிக்கு தொடர்வண்டி மூலம் செல்ல வேண்டுமானால் 75 கிமீ தொலைவில், அஸ்ஸாமில் உள்ள சிவசாகரில் 'லக்வா' என்று தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. லக்வாவில் இறங்கி பேருந்து மூலம் மான் பகுதிக்கு செல்லலாம். அதுபோல் கௌகாத்தி தொடர்வண்டி நிலையமும் மான் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் மான் பகுதிக்கு 251 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திமாபுர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி பேருந்துகள் அல்லது டாக்ஸிகள் மூலம் மான் பகுதிக்குச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மான் பகுதிக்கு விமானம் மூலமாகச் செல்ல வேண்டுமென்றால், மானுக்கு 479 கிமீ தொலைவில் கௌகாத்தி விமான நிலையமும், 157 கிமீ தொலைவில் ஜார்ஹட் விமான நிலையமும், 296 கிமீ தொலைவில் திமாபுர் விமான நிலையமும் அமைந்துள்ளன. இந்த விமான நிலையங்களில் இறங்கி அரசு பேருந்துகள் அல்லது சுற்றுலா டாக்ஸிகள் மூலம் மான் பகுதிக்கு மிக எளிதாகச் செல்லலாம். அதிலும் குறிப்பாக ஜார்ஹட் விமான நிலையத்திலிருந்து மான் பகுதிக்கு சிறந்த சாலை வசதி உள்ளதால், இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே இங்கிருந்து மான் பகுதிக்குச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu