இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காவை காண்பதற்கு தயாராகுங்கள்! இந்தப் பூங்கா அடிப்படையில் டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வெறும் சாகசப் பிரியர்களுக்கானது மட்டுமல்ல, வயது வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் நோக்கத்துடனே உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதன் உலகத் தரமிக்க விளையாட்டு அம்சங்களை அனுபவிக்க எண்ணற்ற வெளிநாட்டு பயணிகளும் இங்கு வருகின்றனர். எஸல் வேர்ல்ட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள மற்றுமொரு கேளிக்கைப் பூங்கா வாட்டர் கிங்டம். இங்கு வரும் பயணிகள் எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம் இரண்டுக்குமான அனுமதி சீட்டையும் ஒன்றாக பெற்றுக் கொள்ளலாம்.இருந்தபோதிலும் இந்த இரண்டு இடங்களுக்கும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக சென்று கேளிக்கையில் ஈடுபடுவதே சிறப்பானதாக இருக்கும்.
வாட்டர் கிங்டமில் உள்ள நீர் சறுக்கு விளையாட்டு மற்றும் அலைக் குளம் போன்ற அம்சங்கள் நீர்ப்பிரியர்களின் நீண்ட நாளைய ஆசையை கண்டிப்பாக பூர்த்தி செய்யும். எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம் இரண்டையும் கோரை கடற்கரையிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் சுலபமாக அடையலாம்.



Click it and Unblock the Notifications