மும்பையின் சமீபத்திய பெருமைக்கு மூல முதல் காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன.
இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இவைபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படி இருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம்.
மேலும், இந்தப் பாலத்தின் மூலம் வோர்லியிலிருந்து வாகனத்தில் செல்லும் ஒரு பயணி, பாந்த்ராவை பத்தே நிமிடத்தில் அடைந்துவிட முடியும். ஆனால் இந்தப் பாலம் சுங்கச் சாவடியாக செயல்பட்டு வருவதால் வாகனம் ஒன்றுக்கு 75 ரூபாய் ஒருமுறை சென்று திரும்புவதற்காக வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications