நாலாபுறமும் கம்பீரமான அரபிக்கடல் சூழ்ந்திருக்குமாறு பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த வரலாற்றுக்கோட்டை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. முருட் ஜஞ்சிராவில் உள்ள இந்த கோட்டை சித்தி ராஜ வம்சத்தாரின் உன்னத ஆட்சிக்காலத்தின் சான்றாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
எதிரிகளால் வெல்ல முடியாத அளவுக்கு வலிமையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டையானது ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் மற்றும் மராத்தா வம்சத்தாரின் தாக்குதல்களை தாங்கி காலத்தில் நீடித்து நிலைத்து நிற்கிறது.
ஆதியில் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கோட்டை பின்னர் வலிமையானதாக மாற்றப்பட்டு எதிரிகளை தாக்கும் தளவாடங்களை சேகரித்து வைக்கப்பயன்பட்டுள்ளது. பல வருடங்களை கடந்தும், ஓயாமல் வீசும் அரபிக்கடலின் உப்பு நீர் அலைகளைத் தாங்கிக்கொண்டும் இந்த கோட்டை கொஞ்சமும் சிதையாமல் உயர்ந்து நிற்பது அக்கால கட்டிடக்கலை பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.



Click it and Unblock the Notifications