Search
  • Follow NativePlanet
Share

நால்தேஹ்ரா – கோல்ஃப் பிரியர்களுக்கான எழில் பிரதேசம்!

13

ஓவியம் போன்ற எழிற்காட்சிகள் நிரம்பி வழியும் மலைநகரமான நால்தேஹ்ரா ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் 2044 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ‘நாக்’ மற்றும் ‘தேஹ்ரா’ என்ற இரண்டு வார்த்தைகளை சேர்த்து இந்த பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பெயருக்கு நாகதெய்வம் உறையும் புனிதஸ்தலம் என்பது பொருளாகும். நாகதெய்வத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் மாஹுநாக் கோயில் இந்த நால்தேஹ்ரா நகரின் முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும்.

வரலாற்றுக்குறிப்புகளின்படி கர்சன் பிரபு எனும் ஆங்கிலேய வைசிராய் இந்த மலைஸ்தலத்தை கண்டுபிடித்ததாக தெரியவருகிறது. இந்த எழில் பிரதேசத்தின் ரம்மியமான சூழலால் கவரப்பட்ட அவர் இங்கு ஒரு கோல்ஃப் மைதானத்தை நிறுவ முடிவு செய்துள்ளார்.

ஆங்கிலேய தாக்கம் காரணமாக இப்பகுதியில் ஆங்கிலம் பரவலாக பேசப்படுவதுடன் ஹிந்தி, பெங்காலி, கோர்க்கா, நேபாளி மற்றும் திபெத்திய மொழிகளும் இங்கு வழக்கில் இருக்கின்றன.

இந்த மலைஸ்தலம் இங்குள்ள கோல்ஃப் மைதானத்த்திற்கு புகழ் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமையான சிறப்பான கோல்ஃப் மைதானமாக இது அறியப்படுகிறது.

இது தவிர இங்கு நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சந்தைகளுக்கும் நால்தேஹ்ரா ஸ்தலம் பிரசித்தி பெற்றுள்ளது. இவற்றில் சிபி ஃபேர் எனப்படும் சந்தைத்திருவிழா குறிப்பிடத்தக்கது.

இது ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. மேலும், அக்டோபர் மாதத்தில் ஜொட்டோன் கா மேளா எனும் திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதில் காளைச்சண்டைகள் போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.

இவை தவிர சபா, தட்டாபாணி, ஷைலி பீக், மஹாகாளி பீக் மற்றும் கோகி மாதா கோயில் போன்றவையும் நால்தேஹ்ரா பகுதியில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.

நால்தேஹ்ரா சுற்றுலாத்தலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் அருகிலேயே உள்ளது.

இது டெல்லி மும்பை போன்ற நகரங்களுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது. தவிர அருகில் உள்ள சர்வதேச விமானநிலையமாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

நால்தேஹ்ராவிலிருந்து 112 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது மும்பைடெல்லி போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. சிம்லா மற்றும் மஷோப்ரா போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் நால்தேஹ்ராவுக்கு வரலாம்.

இந்த அழகிய மலைநகரத்துக்கு விஜயம் செய்வதற்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களும், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களும் ஏற்றவையாக உள்ளன.

நால்தேஹ்ரா சிறப்பு

நால்தேஹ்ரா வானிலை

சிறந்த காலநிலை நால்தேஹ்ரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நால்தேஹ்ரா

  • சாலை வழியாக
    சிம்லா மற்றும் மஷோப்ராவிலிருது பேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் நால்தேஹ்ரா நகரத்திற்கு எளிதாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நால்தேஹ்ரா நகரத்திற்கு அருகில் 19 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது தவிர 310 கி.மீ துரத்தில் உள்ள சண்டிகர் ரயில் நிலையம் மூலமாகவும் மணிகரண் நகரத்துக்கு வரலாம். இந்த இரண்டு ரயில் நிலையங்களும் டெல்லி மற்றும் இதர நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நால்தேஹ்ரா நகரத்திற்கு மிக அருகில் 60 கி.மீ தூரத்தில் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி, சண்டிகர், மும்பை, ஸ்ரீநகர் போன்ற முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலம் நால்தேஹ்ரா நகருக்கு வரலாம். தவிர அருகில் உள்ள சர்வதேச விமானநிலையமாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu