Search
  • Follow NativePlanet
Share

நஞ்சன்கூடு – தொன்மையான கோயில் நகரம்

10

கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த நகரம் பின்னர் ஹொய்சள வம்சத்தினராலும் அவர்களைத் தொடர்ந்து மைசூர் உடையார்களாலும் ஆளப்பட்டுள்ளது. ஷீரங்கப்பட்டணாவை ஆண்ட மன்னர்களான ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் இந்த நகரத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்துள்ளனர்.

 

நஞ்சன்கூடு நகரம் பற்றிய சில தகவல்கள்

இந்த நகரத்தின் முக்கிய தெய்வமாகிய நஞ்சுண்டேஸ்வரரின் பெயரிலேயே இது நஞ்சன்கூடு என்றழைக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள உயிர்களைக் காப்பதற்காக ஆலாகால விஷத்தை (திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்டது இந்த விஷம்) அருந்திய சிவபெருமான் இங்கு நஞ்சுண்டேஸ்வர அவதாரமாக குடிகொண்டுள்ளார்.

மேலும் இந்த நஞ்சன்கூடு ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு பிணிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம்.

இது தவிர ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம் மற்றும் பரசுராம க்ஷேத்திரம் என்ற இரண்டு ஆன்மிக ஸ்தலங்களும் நஞ்சன்கூடு நகரத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் பிரசித்தமான சிலையை இங்கு நஞ்சன்கூடு மடத்தில் காணலாம்.

பெங்களூரிலிருந்து 163 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் உள்ள இந்த நஞ்சன்கூடு நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக அமைந்துள்ளது. கோயில் நகரமாக மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார மையமாகவும் இது மாறியுள்ளது.

நஞ்சன்கூடு சிறப்பு

நஞ்சன்கூடு வானிலை

சிறந்த காலநிலை நஞ்சன்கூடு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நஞ்சன்கூடு

  • சாலை வழியாக
    நஞ்சன்கூடு நகரம் மைசூர் பெங்களூருக்கு அருகில் உள்ளதால் தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. இந்த இரண்டு நகரங்களிலிருந்து நஞ்சன்கூடு செல்வதற்கு கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நஞ்சன்கூடு நகரத்திலேயே ரயில் நிலையம் உள்ளது. இது மைசூர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய ரயில் நிலையம் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மைசூர் ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இங்கிருந்து டாக்சிகள், வேன்கள் மூலம் நஞ்சன்கூடு நகரத்தை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நஞ்சன்கூடு நகரத்திலிருந்து 160 கி.மீ தூரத்திலுள்ள பெங்களூரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும், ஐரோப்பிய, ஆசிய, வட-தென் அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நகரங்களுக்கும் நிறைய விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jun,Wed
Check Out
11 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jun,Wed
Return On
11 Jun,Thu