Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையான லால்பாக்சா ராஜாவுக்கு ரூ.15 கோடியில் தங்க கிரீடம்!

இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையான லால்பாக்சா ராஜாவுக்கு ரூ.15 கோடியில் தங்க கிரீடம்!

இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி விமர்சியாக கொண்டாடப்பட்டாலும், மும்பையின் கொண்டாட்டத்திற்கு எதுவும் நிகராகாது. அதிலும் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் சிலையான, மும்பையின் ராஜாவான, 'லால்பாக்சா ராஜா' எனும் விநாயகரை தரிசிக்க அம்பானி குடும்பம் துவங்கி, சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய பிரபலங்களும் வருகை தருவார்கள். பொதுமக்கள் 40 மணி நேரம் காத்திருந்து இவரை தரிசித்து செல்கின்றனர். இந்த லால்பாக்சா ராஜாவுக்கு முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ எடை கொண்ட தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்!

இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்டம் - விநாயகர் சதுர்த்தி

லால்பாக்சா ராஜா, அல்லது லால்பாக் மன்னர், நவசாச்சா கணபதி அல்லது விருப்பத்தை நிறைவேற்றும் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார், இது மும்பையின் விநாயக சதுர்த்தியின் வண்ணமயமான மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும், புட்லபாய் சாவ்லில் அமைந்துள்ள 'லால்பாக்சா ராஜா'வின் முதல் தோற்றத்தை வெளியிடுவதன் மூலம் கணேஷோத்சவ் விழாக்கள் தொடங்குகின்றன. மும்பையில், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இவர் தான் நாயகன்.

மும்பை மக்களின் வாழ்வில் அங்கமான லால்பாக்சா ராஜா

லால்பாக்சா ராஜாவின் ஆரம்பம் 1930 களில் துவங்கியது. ஜவுளி ஆலைகளால் நஷ்டத்திற்கு உள்ளான. உள்ளூர்வாசிகள் தங்கள் இஷ்ட தெய்வமான விநாயகரை நோக்கி, பிரார்த்தனை செய்தனர். தற்போது லால்பாக் மார்க்கெட் என்று அழைக்கப்படும் நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு சமூகம் உயிர் பிழைக்க முடிந்தது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, விநாயகப் பெருமானின் ஆசீர்வாதம் அவர்கள் கடினமான நேரத்தில் உயிர்வாழ உதவியது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் நிறுவப்படும் சர்வஜனிக் கணேஷ் மண்டல் (விழாவின் சமூகக் கொண்டாட்டம்) எனப்படும் நிலத்தின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க சமூகம் முடிவு செய்தது. உள்ளூர் மக்கள் தங்களுக்குப் பிடித்த கடவுளுக்கு வெவ்வேறு ஆடைகளை அணிவித்து, அவரை ராஜா அல்லது உள்ளூர் ராஜா என்று அழைத்தனர். அன்று முதல் இவர் மும்பையின் ராஜாவாக இருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாயில் தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன.

anantambanidonates20kggoldcrown

லால்பாக்சா ராஜாவை கனா குவியும் பிரபலங்கள் மற்றும் மக்கள்

மும்பையின் ராஜாவை காண ஒவ்வொரு ஆண்டும் மும்பை மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மும்பை மாநகருக்கு செல்கின்றனர். மும்பையில் வசிக்கும் அம்பானி குடும்பம் துவங்கி, ஐஸ்வர்யா ராய், அபிசேக் பச்சன், சச்சின் டெண்டுல்கள் குடும்பம் என தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் இந்த ராஜாவை காண வருகை தருவார்கள்.

ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம் அன்பளிப்பு

அனந்த் அம்பானி மற்றும் முழு அம்பானி குடும்பமும் கடந்த பல ஆண்டுகளாக லால்பாக்சா ராஜா மண்டலத்துடன் தொடர்புடையவர்கள், மிகுந்த பக்தி உடையவர்கள். முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜாவுக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை பரிசாக அளித்துள்ளார்.

லால்பாக்சா ராஜா மீது பக்தி உடையவர்கள் அவர்கள்

லால்பாக்சா ராஜா மண்டலத்தின் தலைவர் பாலாசாகேப் காம்ப்ளே கூறுகையில், "20 கிலோ எடையுள்ள தங்க கிரீடம் நன்கொடையாக நேற்று கொண்டுவரப்பட்டது. முதல் பார்வைக்குப் பிறகு ராஜா அணிந்திருந்தார். அம்பானி குடும்பம் நீண்ட காலமாக மண்டலத்துடன் தொடர்புடையது, அவர்களைப் பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். கணபதி பாப்பா மீது பக்தி" என்று கூறியுள்ளார்.

தரிசனம் மற்றும் ஆரத்தி நேரங்கள் இங்கே

தரிசனம்: 5:00 மணி - 11:00 மணி

காலை பூஜை: 6:00 மணி - 7:00 மணி

மதியம் பூஜை: 1:00 மணி - 2:00 மணி

மாலை பூஜை: 7:00 மணி - 8:00 மணி

காலை ஆரத்தி: 7:00 மணி - 7:15 மணி

மதியம் ஆரத்தி: 1:00 மணி - 1:15 மணி

மாலை ஆரத்தி: 7:00 மணி - 7:15 மணி

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+