Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் புதிய பேருந்து நிலைய பரபரப்பே இன்னும் முடியவில்லை அதற்குள் சென்னைக்குள் புதிய விமான நிலையமா?

சென்னையின் புதிய பேருந்து நிலைய பரபரப்பே இன்னும் முடியவில்லை அதற்குள் சென்னைக்குள் புதிய விமான நிலையமா?

சென்னை மாநகரின் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சென்னையின் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தையே இன்னமும் மக்கள் முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அதற்குள் சென்னை விமான நிலையம் இடம் மாறப் போகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆம், காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம்

தினந்தோறும் 40000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வந்து செல்வதால், நகர்ப்புறங்களில் கடும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த விமான நிலையத்தில் ஒன்றரை கோடி மக்கள் கூட்டத்தை மட்டுமே சமாளிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடி ஆகும். கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாலும், சென்னையை மேலும் மேம்படுத்தப்பட்ட நகராக மாற்றுவதர்காகவும் சென்னையில் இரண்டாவது விமான நிலையமொன்று உருவாக்க மத்திய விமான அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

chennaisnewairport1

பரந்தூரில் 2ஆவது விமான நிலையம்

இந்த நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதற்காக பரந்தூரில் 6,000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார். இந்த புதிய விமான நிலையம் சென்னையின் 2ஆவது விமான நிலையமாக இருக்குமே தவிர மீனம்பாக்கம் விமான நிலையம் எப்பொழுதும் போல தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு

இதற்கான ஐம்பது சதவீத இடம் ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் ஐம்பது சதவீத இடம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டவுடன், பிற்படுத்தப்பட்ட பகுதியில் நில விலைகள் உயரும் தவிர, 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்புகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennaisnewairport

நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியீடு

விமான நிலையத்திற்காக, மாநில அரசு 5,369 ஏக்கர் (2,173 ஹெக்டேர்) நிலத்தை கையகப்படுத்த முன்மொழிகிறது, இதில் 47% பாசன விவசாய நிலம், 16% வறண்ட விவசாய நிலம் மற்றும் மற்றொரு 27% நீர்நிலைகள். இதுவரை, நிலம் கையகப்படுத்தப்படும் 13 கிராமங்களில் ஒன்றான பொடவூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சென்னை விமான நிலையம் மாதிரி வடிவம்

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த வகையில் புதிதாக அமைக்கப்பட உள்ள பரந்துர் விமான நிலையத்தின் மாதிரி வடிவம் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும் இதன் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பையும் பெற்றுள்ளது.

சென்னையில் இருந்து வெகுதூரத்தில் புதிய விமான நிலையம்

புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு மீனம்பாக்கத்திற்கு பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 67 கிமீ தொலைவிலும் உள்ளது. விரைவில் கட்டப்படும் புதிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 3 கிமீ தொலைவில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

More News

    Read more about: chennai travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+