மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை கூடிய விரைவில் திறக்கப்படவுள்ளது. புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை திறப்பு விழாவுக்குப் பிறகு பெங்களூரு-சென்னை இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் அறிவித்தார்!
அதிகப்படியான மக்கள் தினந்தோறும் பயணம்
சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஒரு மாபெரும் கூட்டம் தினமும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான சராசரி பயண நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும். மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பற்றி குறிப்பிட்டு, எக்ஸ்பிரஸ்வே பயணத்திற்கு தயாரானவுடன் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

இரண்டு மணி நேர பயணம்
262 கிமீ நீளமுள்ள பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை ரூ.16,730 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. புதிய நான்கு வழி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, அரசாங்கத்தின் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2022 மே மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த விரைவுச் சாலை 2025 டிசம்பரில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் இது இந்த ஆண்டே பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு பயணிகள் இரண்டரை மணி நேரத்தில் பெங்களூருவை அடைந்திடலாம்.
மாபெரும் பொருட்செலவில் தயாராகும் சாலை
சென்னை-பெங்களூருவை இணைக்கும் புதிய பசுமை விரைவுச்சாலையில் 4-வழி இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை இருக்கும். 262 கிமீ நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை கிட்டத்தட்ட ரூ. 17,000 கோடி செலவில் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 262 கிமீ தூரத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த சாலை ஒரு 8-லேன் எக்ஸ்ப்ரஸ்வே ஆகும். இந்த சாலையில் வாகனங்கள் 120 கிமீ வேகத்தில் செல்லலாம், அந்த அளவுக்கு உறுதியாக சாலை வடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
வேலை வாய்ப்பை உருவாக்கும் எக்ஸ்பிரஸ்வே
அறிக்கையின்படி, தென்னிந்தியாவில் ஆறு தனியார் நிறுவனங்கள் இந்த விரைவுச் சாலையின் கட்டுமானத்தைக் கையாளுகின்றன. மேலும் சிறப்பான அம்சம் என்னவென்றால், விரைவுச் சாலையானது பயண நேரத்தை மட்டும் குறைக்கப் போவதில்லை, பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலையின் கட்டுமானம் சுமார் 3,000 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் கிட்டத்தட்ட 90,000 பேருக்கு தற்காலிக வேலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிராபிக் இல்லாத பயணம்
புதிய பசுமை விரைவுச்சாலை செயல்படத் தொடங்கியதும், அது சென்னையிலிருந்து பெங்களூரு செல்வதற்கான 5 முதல் 6 மணி நேர பயண நேரத்தை வெறும் 2 மணிநேரமாகக் குறைக்கும். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் நவீன போக்குவரத்து சாதனங்களுடன் சாலை நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. புதிய விரைவுச் சாலையால் பெங்களூரு-சென்னை இடையேயான தூரம் 300 கிமீயில் இருந்து 262 கிமீ ஆக குறையும். அதோடு ட்ராபிக் இல்லாமல் இருப்பதால் மக்கள் வெகு விரைவாக பெங்களூரிலிருந்து சென்னையையும், சென்னையில் இருந்து பெங்களூருவையும் அடைந்திடலாம்.



Click it and Unblock the Notifications





