Search
  • Follow NativePlanet
Share
» »இனி திருநெல்வேலிக்கு சுலபமா போகலாம் – வந்துவிட்டது சென்னை to திருநெல்வேலி வந்தே பாரத்!

இனி திருநெல்வேலிக்கு சுலபமா போகலாம் – வந்துவிட்டது சென்னை to திருநெல்வேலி வந்தே பாரத்!

ஏற்கனவே சென்னையிலிருந்து மைசூருக்கும், கோயம்புத்தூருக்கும் வந்தே பாரத் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் இப்போது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு புதிதாக வந்தே பாரத் சேவைகள் துவங்கப்படவுள்ளன. நாட்டின் 26 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

1

நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

தினமும் சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். கோவைக்கு வந்தே பாரத் துவங்கும் போதே நெல்லைக்கும் இயக்கும்படி பல கோரிக்கைகைள் எழுந்தன. அதன்படி இப்போது நெல்லைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே வந்தே பாரத் சேவை துவங்கப்படவுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் பெரிதும் சந்தோஷமடைந்துள்ளனர்.

குறையும் பயண நேரம்

தற்போது நெல்லை எக்ஸ்பிரஸ் 10.40 மணி நேரமும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 11 மணி நேரமும் சென்னை-திருநெல்வேலி இடையே பயணத்தை முடிக்கின்றன. திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வந்தே பாரத் அறிமுகம் ஒரு வரப்பிரசாதம். இது இரவு நேர ரயில்களுக்கான தேவையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தென் பகுதிக்கு விரைவான இணைப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மணி நேரத்தில் இலக்கு

காலை திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில், மதியம் சென்னை எழும்பூரை எட்டு மணி நேரத்தில் அடையும் என்ற கூறப்படுகிறது. இடைப்பட்ட 650 கி.மீ தூரத்தை எட்டு மணி நேரங்களில் கடப்பது என்பது சிறப்பான விஷயம் தானே. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும், மற்ற சின்ன ஸ்டேஷன்களில் நிற்காது என்று கூறப்படுகிறது.

2

தென் மாவட்ட பயணிகள் பலனடைவார்கள்

சென்னை - திருநெல்வேலி - நாகர்கோவில் மார்க்கத்தில் வார இறுதி நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். இச்சூழலை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்கள் பல ஆண்டுகளாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. இருப்பினும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகத்தால், இந்த பிரிவில் திருவிழா கூட்டம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் திருச்சி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் துவங்கி வைக்கிறார்

மதுரை - திருநெல்வேலி பிரிவில் மின்மயமாக்கல் மற்றும் பாதை இரட்டிப்பு பணிகள் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, 26 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்பட உள்ளது. அரை அதிவேக ரயிலை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத்

கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை - மைசூரு இடையேயும், ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை - கோயம்புத்தூர் இடையேயும் தொடங்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலுக்குப் பிறகு இது தமிழ்நாட்டில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.

More News

    Read more about: vande bharat indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+